
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி. சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் 6-வது நாளான இன்று மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.
இதில் 19-21, 14-21 என்கிற கேம் கணக்கில் சீனாவின் பிங் ஜியாவிடம், பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் அவர் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளார்.
பி.வி. சிந்து, கடந்த 2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும், 2020 ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.