ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’.
இப்படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - அனிருத்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பெரும்பாலும் ஞானவேலின் படங்களில் சமூக கருத்துகள் நிறைந்திருக்கும், அதற்கேற்ப அமைந்திருக்கிறது வேட்டையனின் டிரைலர்.
அனிருதின் இசை படத்துக்கு கூடுதல் பலமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
காவல்துறை அதிகாரியாக வரக்கூடிய ரஜினி பல ரவுடிகளை வெளுத்து வாங்கும் வகையில் அதிரடியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வழக்கமான ஞானவேல் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக வேட்டையன் அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.
அதிகமான அதிரடி சண்டைக் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.