பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா அன்புமணி சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘அலங்கு’.
இப்படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத், குணாநிதி, காளி வெங்கட் உள்பட பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மூன்று மகள்களில் ஒருவரான சங்கமித்ரா தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ, விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து குறித்தும் புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்கை குறித்தும் இக்கதை அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.