மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 2017-ல் நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் நடிகர் திலீப் குமார் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து 2018-ல் திரைத்துறையில் பணிபுரியும் பெண்களின் நிலையை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணை தொடர்பான அறிக்கை தொடர்ந்து வெளியிடப்படாமல் இருந்த நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை கட்டாயப்படுத்துவதாகவும், அவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு இல்லை என்றும் வேலை செய்யும் இடங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களை திட்டுவதாகவும், இணையத்திலும் அவர்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.