ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்பதாக நடிகர் மம்மூட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த மோகன்லால் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அம்மா சங்கம் மீது அவதூறு பரப்பாதீர்கள் என்று கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் மற்றொரு மூத்த நடிகரான மம்மூட்டி மலையாளத் திரையுலகில் எழுந்த பாலியல் புகார்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மம்மூட்டி கூறியதாவது:
“ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் எந்த பிரிவினையும் இன்றி ஒன்றாக நிற்க வேண்டிய தருணம் இது. இனி இவ்வாறு நடக்காமல் இருக்க அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றங்கள் தண்டனையை தீர்மானிக்கட்டும்” என்றார்.