நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் தனுஷின் மகன் யாத்ரா பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 30 அன்று வெளியாக உள்ள நிலையில் அப்பாடல் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இப்பாடலின் ஹூக் வரிகளை யாத்ரா எழுதியுள்ளதாகவும், மற்ற வரிகளை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளதாகவும் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனுஷின் மகன் யாத்ரா பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார்.