இந்தியளவில் இந்தாண்டு வெளியான படங்களில் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது மகாராஜா.
2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன்.
இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மகாராஜா’.
இப்படம் கடந்த ஜூன் 14 அன்று வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் தொடர்ந்து சிறந்த 10 படங்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
மேலும், ஓடிடி-யில் வெளியான முதல் இரண்டு நாட்களில் இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது இந்தியளவில் இந்தாண்டு வெளியான படங்களில் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது மகாராஜா.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களில் 1.86 கோடி பார்வைகளை பெற்று மகாராஜா முதலிடத்தில் உள்ளது.
தபு, கரீனா கபூர் ஆகியோர் நடித்த ’க்ரூ’ படம் 1.79 கோடி பார்வைகளை பெற்று 2-வது இடத்திலும், லாபட்டா லேடீஸ் படம் 1.71 கோடி பார்வைகளை பெற்று 3-வது இடத்திலும் உள்ளன.