ஆண்டுக்கு 4 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்: பிரசாந்த்

குறிப்பிட்ட இயக்குநர்களுடன் என்றில்லாமல், அனைத்து இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
பிரசாந்த்
பிரசாந்த்
1 min read

கோட் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நடித்த அந்தகன் படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியானது. இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்த், “ஆண்டுக்கு 4 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். எல்லாம் கடவுளின் கையில் தான் இருக்கிறது. அவரை நம்புகிறேன். நிச்சயம் நல்லதே நடக்கும். குறிப்பிட்ட இயக்குநர்களுடன் என்றில்லாமல், அனைத்து இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

கோட் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். அனைவரும் இந்த சமூகத்துக்கு ஏதாவது சில நல்ல விஷயங்களை செய்ய வேண்டும், அதனால் விஜய் அரசியலுக்கு வந்த முடிவை வரவேற்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in