கோட் படத்துக்கு அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படம் தற்போது தளபதி 69 எனத் தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.
ஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு போன்ற பிரபல நடிகர்கள் நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.
அரசியலில் நுழைவதால் இதுவே தன்னுடைய கடைசிப் படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் தளபதி 69 படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
விஜய், ஹெச். வினோத், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பூஜையில் கலந்துகொண்டார்கள். விஜயின் 69-வது படம் 2025 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.