ஒருவரை சிரிக்க வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் அதை 30 வருடங்களுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கும் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று
1988-ல் அறிமுகமான இவர் இதுவரை 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
புல்லட் பாண்டி, வக்கீல் வண்டுமுருகன், கைப்புள்ள, நாய் சேகர், நேசமணி என இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரும் மிகவும் பிரபலமடைந்தது
‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என அவர் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் நம் தினசரி வாழ்கையில் பயன்படுத்தப்படுகிறது
வடிவேலுவின் பிறந்த நாளில் அவரது அடுத்தப் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது