தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா

கிழக்கு நியூஸ்

முதல் அரசியல் மாநாட்டில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மக்கள் முன் வைக்கப்படவுள்ளன. 

இந்த மாநாட்டுக்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் இந்தப் பூஜைகள் நடைபெற்றன.

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதினார்.