கிழக்கு நியூஸ்
பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா - கர்நாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஆகியோரின் காதல் திருமணம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. (படம்: https://x.com/Srikantkarunesh)
வேத மரபுகளின்படி திருமணம் நடைபெற்றதாக தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
2022-ல் தேர்தல் பிரசாரத்துக்காக தேஜஸ்வி சூர்யா, சென்னை வந்திருந்தபோது, சிவஸ்ரீயின் கச்சேரியைப் பார்த்துள்ளார். (படம்: https://x.com/SVishnuReddy)
இருவரும் நட்பு ரீதியாகப் பேச ஆரம்பித்து அந்த உறவு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். (படம்: https://x.com/Tej_AnanthKumar)
மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி நேரில் சென்று இருவரையும் வாழ்த்தினார். (படம்: https://x.com/JoshiPralhad)
மணமக்களை வாழ்த்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் (https://x.com/arjunrammeghwal)
மார்ச் 9-ல் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. (படம்: https://x.com/alwaysajay1013)
திருமண புகைப்படங்களை தேஜஸ்வி சூர்யா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (படம்: https://www.instagram.com/tejasvisurya/)
இப்புதிய அத்தியாயத்தில் அனைவரது ஆசி மற்றும் வாழ்த்துகளைக் கோரி இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். (படம்: https://www.instagram.com/tejasvisurya/)