கிழக்கு நியூஸ்
அனிருதா ஸ்ரீகாந்த், சம்யுக்தா திருமணம் சென்னையில் நவம்பர் 27 அன்று நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ இருவருடைய திருமணமும் இனிதே நடைபெற்றது.
முன்னாள் வீரரான அனிருதா, தற்போது கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறார். மேலும், யூடியூபில் தந்தை ஸ்ரீகாந்துடன் சேர்ந்து யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
சம்யுக்தா சண்முகநாதன் கடந்த 2007-ல் மிஸ் சென்னை பட்டம் பெற்றார். 2020-ல் பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று புகழ்பெற்றார். தமிழில் விஜயின் வாரிசு உள்ளிட்ட படங்களில் சம்யுக்தா நடித்துள்ளார்.
பிரபல தொகுப்பாளர் பாவனா, நடிகைகள் வாணி போஜன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் திருமண விழாவில் பங்கேற்றார்கள்.
இவர்களுடைய திருமணத்துக்கு மேலும் பலர் சமூக ஊடகப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
ஸ்ரீகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாவனா.