கிழக்கு நியூஸ்
ஐபிஎல் தொடக்கம் முதல் ரசிகர்கள் எதிர்கொண்ட கேலி, கிண்டல்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
18 ஆண்டுகளாக தன் இளமை, உச்சம், அனுபவம் என எல்லாவற்றையும் ஆர்சிபிக்காக கொடுத்த கோலியின் கையில் இறுதியாக முதல் ஐபிஎல் கோப்பை...
வெற்றிக் கோப்பையை எங்களுடன் இணைந்து கையில் ஏந்த ஏபி டி வில்லியர்ஸ் முழுத் தகுதியுடையவர் எனப் புகழாரம் சூட்டினார் கோலி.
மாற்று வீரராக ஆர்சிபி அணிக்கு வந்து...
அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறி...
ஐபிஎல் 2025-ல் கேப்டன் பொறுப்பை ஏற்று...
முதல் ஆண்டிலேயே ஆர்சிபியின் 18 வருட காத்திருப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் கேப்டன் ரஜத் படிதார்.
வெற்றிக்குப் பிறகான கோலியின் கண்ணீர்... கோடிக்கணக்கான ஆர்சிபி ரசிகர்களின் கண்ணீர்...
ஆர்சிபிக்கு இக்கோப்பை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இக்கண்ணீரிலிருந்து உணரலாம்.