கிழக்கு நியூஸ்
வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனுவை பிரியங்கா காந்தி இன்று தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலின்போது மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.