கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

கிழக்கு நியூஸ்

ஜிகேஎம் காலனியில் புதுப்பிக்கப்பட்ட உடற்பயிற்சிக்கூடம் மற்றும் நேர்மை நகர் மயான பூமியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நீத்தார் நினைவு மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

முத்துகுமரப்பா தெருவில் மூன்று தளங்கள் கொண்ட சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேப்பர் மில்ஸ் சாலையில் புதிதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிடம் மற்றும் வணிக வளாகங்களுடன் கூடிய மக்கள் சேவை மையம் கட்டப்படவுள்ள இடத்தைப் பார்வையிட்டார்.

செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது குறித்த கேள்விக்கு ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும் என்று பதிலளித்தார்.