மனம் கவரும் மமிதா பைஜூ! | Mamitha Baiju |

கிழக்கு நியூஸ்

மமிதா பைஜூவின் தந்தை மருத்துவர் என்பதால் இவருக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்று தான் தொடக்கத்தில் ஆசை இருந்திருக்கிறது.

(படம்: https://www.instagram.com/mamitha_baiju/)

2017 முதல் மலையாளத் திரையுலகில் நடித்து வருகிறார். சினிமாவில் முதலில் நடிக்கும்போது மமிதா 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

மமிதா பைஜூவின் சூப்பர் சரண்யா தான் மலையாளத்தில் மிகப் பிரபலம்.

சூப்பர் சரண்யாவுக்குப் பிறகு பிரேமலு மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடிக்கத் தொடங்கினார் மமிதா.

தமிழில் இவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான டியூட் படம் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் அடுத்த படம் விஜயின் ஜனநாயகன்.

விஜயின் பிறந்தநாள் ஜூன் 22. மமிதாவின் பிறந்தநாளும் ஜூன் 22. இருந்தபோதிலும், கடந்த ஜூன் 22 அன்று ஜனநாயகன் படப்பிடிப்பு நடைபெறாததால், இருவரும் இணைந்து கேக் வெட்டவில்லை.

பிரதீப் ரங்கநாதன், விஜய் வரிசையில் தற்போது சூர்யா நடித்து வரும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மமிதா பைஜூ.

கல்யாணி பிரியதர்ஷனின் லோகா படம் மமிதா பைஜூவை மிகவும் கவர்ந்துள்ளது. எனவே, அடுத்தடுத்த பாகங்களில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.