கிழக்கு நியூஸ்
ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும்.
பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு.
புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படும்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 11 கிலோ அரிசி, கோதுமை வழங்கும் நடைமுறை மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப்படும்.