கிழக்கு நியூஸ்
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் மோதின.
மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமாகி, மாலை 5 மணிக்கு தான் ஆட்டம் தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஸ்மிருதி மந்தனா - ஷெஃபாலி வர்மா இணை முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது.
அரை சதம் அடித்த ஷெஃபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.
அரை சதம் அடித்த தீப்தி சர்மா 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.
கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாட, இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது.
அரையிறுதிச் சுற்றில் சதமடித்த தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் விளையாடி வந்தார்.
விக்கெட் தேவைப்பட்டபோது பகுதிநேரப் பந்துவீச்சாளரான ஷெஃபாலி வர்மாவிடம் பந்தைக் கொடுக்க, அவர் முதலிரு ஓவர்களில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை உண்டாக்கினார்.
தனிநபராகப் போராடிய லாரா வோல்வார்ட், இறுதிச் சுற்றிலும் சதமடித்தார்.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி சர்மா, லாரா வோல்வார்ட் விக்கெட்டையும் வீழ்த்தினார். அமன்ஜோத் கௌர் அட்டகாசமான கேட்சை பிடித்து கலக்கினார்.
தென்னாப்பிரிக்க மகளிர் 246 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையைப் பெறுவதற்கு முன்பு கொண்டாடித் தீர்த்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்.
ஐசிசி தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து உலகக் கோப்பையைப் பெற்றுக்கொண்ட ஹர்மன்பிரீத் கௌர்.
முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தது இந்திய மகளிர் அணி.