ஐஐஎஃப்ஏ விருது விழாவில் திரைப் பிரபலங்கள்!

யோகேஷ் குமார்

ஐஐஎஃப்ஏ விருது விழா அபுதாபியில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
செப். 29 வரை நடைபெறும் இவ்விழாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட நடிகர், நடிகைகள் பலரும் பங்கேற்கின்றனர்.
இதில், பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என 4 விருதுகள் கிடைத்தன.
நடப்பாண்டில் இந்திய சினிமாவின் சிறந்த மகளிருக்கான விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டது.