செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரர்கள்!

யோகேஷ் குமார்

ஹங்கேரியின் தலைநகர் புதாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தன.
ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா, தானியா சச்தேவ், கேப்டன் அபிஜித் குண்டே ஆகியோர் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருந்தார்கள்.
193 அணிகள் பங்கேற்ற ஓபன் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது.
இதில் கலந்துகொண்ட தமிழக வீரர், வீராங்கனைகள் இன்று சென்னைக்கு திரும்பினர்.