கிழக்கு நியூஸ்
'பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். தொடருக்குப் பின் ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் ‘கருடன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’, ‘காளி வெங்கட்டின் ‘மெட்ராஸ் மேட்னி’ போன்ற படங்களிலும் நடித்தார்.
இசையமைப்பாளர் சுந்தர மூர்த்திக்கும் இவருக்கும் கடந்த பிப்ரவரி 15 அன்று குடும்பத்தினர், நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.
‘பொம்மை நாயகி’, ‘ஐரா’, ‘தண்டட்டி’, ‘பிகினிங்’, ‘டென் ஹவர்ஸ்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சுந்தர மூர்த்தி.
திருமணப் படங்களை ரோஷினி சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து திரைப்பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.