கிழக்கு நியூஸ்
பேட்டிங் வரிசையில் முதல் நான்கு இடங்களில் மாற்றம் எதுவும் இல்லை. ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் உள்ளார்கள்.
ஷுப்மன் கில்
விராட் கோலி
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்ஃபராஸ் கானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரிஷப் பந்த் டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக டிசம்பர் 2022-ல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நம்பிக்கையளித்த துருவ் ஜுரெல் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் அணிக்குத் திரும்பியுள்ளார். கேஎல் ராகுல் முழுநேர பேட்டராக சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களாக அஸ்வின், ஜடேஜா நீடிக்கிறார்கள்.
அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.
முஹமது சிராஜ் தனக்கான இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஆகாஷ் தீப் இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
யஷ் தயாலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.