சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கிய இந்திய வீரர்கள்!

யோகேஷ் குமார்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் செப். 19 அன்று சென்னையில் தொடங்குகிறது.
இன்று காலை சென்னைக்கு வந்த இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியைத் தொடங்கினர்.
தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இது.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று சாதனை படைத்த வங்கதேச அணி இத்தொடரில் இந்தியாவுக்கு சவால் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.