PRINT-91
உலகம்

வாக்குப் பெட்டியில் எங்கள் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்கிறோம்: அதிபர் பைடன்

ராம் அப்பண்ணசாமி

வரும் நவம்பர் 5-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த ஜூன் 14-ல் தேர்தல் பரப்புரையில் பேசிக்கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் டிரம்ப்.

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தை முன்வைத்து தன் அலுவலகத்தில் உரையாற்றினார் அதிபர் பைடன். அவரது உரையின் சுருக்கம்:

`நம்மிடையே ஒற்றுமை தேவை. டிரம்புக்கு நடந்ததை விசாரிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கங்கள் குறித்து அனுமானிக்க வேண்டாம், எஃப்பிஐ அதைப் பார்த்துக் கொள்ளும். ஒரு தேசமாக நாம் நிறகும் அனைத்தும் எதிரானது ஒரு கொலை முயற்சி.

அமெரிக்காவில் இது போன்ற அல்ல எதைப் போன்ற வன்முறை சம்பவங்களுக்கும் இடம் கிடையாது. இது போல நடக்க நாம் அனுமதிக்க முடியாது. நாம் இது போல இருக்கக்கூடாது ஒற்றுமைதான் நம் அனைவரின் இலக்கு. ஒற்றுமையைவிட வேறு எதுவும் இப்போதைக்கு முக்கியமில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நாங்கள் விவாதிப்போம், உடன்படமாட்டோம், நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்போம், (எங்களிடையே) வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அமெரிக்காவில் வாக்குப் பெட்டி வழியாகவே எங்கள் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்கிறோம்'.