பிரேஸில் விமான விபத்து: 62 பேர் உயிரிழப்பு! 
உலகம்

பிரேஸில் விமான விபத்து: 62 பேர் உயிரிழப்பு!

விமானத்தில் பயணம் செய்த 58 விமான பயணிகள், 4 விமான பணியாளர்கள் உட்பட அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

யோகேஷ் குமார்

பிரேஸிலில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

பிரேஸிலின் சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற விமானம் ஒன்றில் 58 விமான பயணிகளும், 4 விமான பணியாளர்களும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சாவ் பாலோ மாகாணத்தில் இந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 62 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வானில் பறந்து கொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

ஏடிஆர் 72 என்கிற விமானம் வின்ஹெடோ குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.