ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதித்திருப்பதற்கு உக்ரைன் அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போக்கை அமெரிக்கா கடைபிடிக்கிறது. அதனால் ரஷ்யாவுடன் வணிக பரிவர்த்தனையில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரிகளை விதித்துள்ளது. குறிப்பாக பிரேசிலுக்கும் இந்தியாவுக்கும் 50%, சுவிட்சர்லாந்துக்கு 39%, கனடாவுக்கு 35% என இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. இதனால் இந்தியா அமெரிக்கா இடையே ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இதனால், இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கலாமா என்பதை அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வர்த்தகம் அமைச்சர் ஸ்காட் பெசென்ட், ”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் வரி விதிகள் திட்டமிட்டுள்ளது” என்று கூறினார். மேலும், இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதித்தல், ரஷ்யாமிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்றும் இதன் மூலம், ரஷ்யாவுக்கு கிடைக்கும் நிதி ஆதாயம் இல்லாமல் போய்விடும்” என்று அவர் தெரிவித்தார்.
இக்கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவான நாடுகளின் மீது அமெரிக்கா கடும் வரிகளை விதித்துள்ளது சரிதான் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், “ரஷ்யாவுடன் வணிக ஆதரவாக செயல்படும் நாடுகளின் மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதிப்பதை வரவேற்கிறேன்’ என்று கூறினார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சியில் தெரிவிக்கும்போது : “ரஷ்யா மீது கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்காவிடமிருந்து அந்த அழுத்தம் வர வேண்டும். உலக நாடுகளில் பலர் ரஷ்ய எண்ணெயையும் எரிவாயுவையும் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது நியாயமில்லை... எனவே, நாம் ரஷ்யாவிடமிருந்து எந்தவித எரிசக்தியையும் வாங்குவதை நிறுத்த வேண்டும். ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக உடன்பாடுகளைச் செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பது சரியான யோசனை என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
Ukraine | Zelensky | Russia | Putin | India | America | America's russian oil tarrif |