அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மருந்துகளுக்கு 100% வரி விதித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா வரி விவகாரத்தில் கடுமையாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் 50% வரி விதித்தது, நம் நாட்டில் பல பொருள்களின் விலைவாசியை உயர்த்தியது. மேலும், வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதற்கு கட்டுப்பாடு, அமெரிக்காவுக்கான விசா நடைமுறையில் மாற்றம் என டிரம்ப் அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள டொனால்ட் டிரம்ப்,
"அக்டோபர் 1, 2025 முதல், அமெரிக்காவில் தங்கள் மருந்து உற்பத்தி ஆலையை அமைக்காத அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100% வரிகள் விதிக்கப்படுகிறது. உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் மருந்துகளுக்கு இந்த வரி விதிப்பு கிடையாது”
என்று கூறினார். மேலும்,
இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல்,
“அக்டோபர் 1, 2025 முதல், சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50% வரியும், மெத்தை உள்ளிட்ட ஃபர்னிச்சர்களுக்கு 30% இறக்குமதி வரியும் விதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். நமது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்”
என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ல் மட்டும் அமெரிக்கா 233 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறங்குமதி செய்துள்ளது. இந்நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.