உலகம்

அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பிரிட்டிஷ் பேரரசு: எலான் மஸ்க் பாராட்டு!

ராம் அப்பண்ணசாமி

உலகளவில் நிலவிய அடிமைத்தனத்தின் பெரும்பகுதியை முடிவுக்குக் கொண்டுவந்ததில் பிரிட்டிஷ் பேரரசு உந்து சக்தியாக இருந்தது என்று தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார் பிரபல தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்.

மேற்குலக நாடுகளின் வரலாறு குறித்துப் பதிவிட்டுவரும் `திங்கிக் வெஸ்ட்’ (Thinking West) என்ற பெயரிலான எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில், உலகளாவிய அடிமைத்தன ஒழிப்பு குறித்துப் பதிவிட்டப்பட்டது. அதில்

`பிரிட்டிஷ் பேரரசு சில வழிகளில் நன்மைக்கான சக்தியாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசால் ஆக்கிரமிக்கப்பட்ட பல இடங்களில், வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டது, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது, கல்வி ஊக்குவிக்கப்பட்டது. ஒற்றைக் கையால் உலகின் பெரும்பகுதியில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

சந்தேகத்துக்கு இடமின்றி சில பயங்கரமான காரியங்கள் பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அடிமைத்தனத்துக்கு எதிரான பிரிட்டனின் வெற்றியானது பேரரசு என்பது எப்போதுமே ஒரு மோசமான விஷயமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இரக்கமுள்ள பேரரசு என்பது சாத்தியமுடைய விஷயமா? ‘ என்று குறிப்பிடப்பட்டது.

திங்கிக் வெஸ்டின் மேற்கூறிய பதிவை மேற்கோள்காட்டி, தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பதிவிட்டவை பின்வருமாறு:

`உலகளவில் நிலவிய அடிமைத்தனத்தின் பெரும்பகுதியை முடிவுக்குக் கொண்டுவந்ததில் பிரிட்டிஷ் பேரரசு உந்து சக்தியாக இருந்தது என்பது இன்று பலருக்கும் தெரியாது.

நாகரிகத்தின் விடியல் ஏற்பட்ட காலத்தில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அடிமைத்தனம் என்பது உலகம் முழுவதும் நிலையான நடைமுறையாக இருந்தது. உதாரணமாக, பைபிளில் கூட இது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.