படம்: https://x.com/NobelPrize
உலகம்

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் மரபணு கட்டுப்பாட்டில் இதன் பங்கு குறித்து கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

2024-ம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் மரபணு கட்டுப்பாட்டில் இதன் பங்கு குறித்து கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1901 முதல் தொழிலதிபர் ஆல்ஃபிரெட் நோபல் பெயரில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், அறிவியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கியப் பங்காற்றிய நிபுணர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர அமைதிக்காகவும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரம் மட்டும் பின்னர் சேர்க்கப்பட்டது.

இவற்றில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படும். நடப்பாண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் உள்ள நோபல் அகாடெமியில் இந்த விருதானது இன்று அறிவிக்கப்பட்டது.

விருது வெல்பவர்களுக்கு சான்றிதழோடு பரிசுத் தொகையும் வழங்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 8.90 கோடி வழங்கப்படும்.