உலகம்

புற்றுநோய் பாதிப்பு: : பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்

கிழக்கு நியூஸ்

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட் மிடில்டன் (42). கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து காணொளியில் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் சார்லஸ் மன்னருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு இது மற்றொரு அதிர்ச்சியான செய்தியாகும்.

இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இளவரசி கேட் மிடில்டன் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.