பாகிஸ்தான் பஞ்சாபின் முதல் பெண் முதல்வர் மரியம் நவாஸ்  
உலகம்

பாகிஸ்தான் பஞ்சாபின் முதல் பெண் முதல்வராக மரியம் நவாஸ் பதவியேற்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மரியம் நவாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஆவார்.

கிழக்கு நியூஸ்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மரியம் நவாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஆவார். மொத்தமுள்ள 371 உறுப்பினர்களில், மரியம் நவாஸுக்கு 220 பேரின் ஆதரவு கிடைத்தது.

முன்னதாக பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல்களில் பிஎம்எல்-என் கட்சி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியது. சபாநாயகர் பதவிக்கு மாலிக் முகமது அகமது கான் 224 வாக்குகளுடனும் துணை சபாநாயகர் பதவிக்கு மாலிக் ஜாகீர் அகமது சானர் 220 வாக்குகளும் பெற்றனர்.

மரியம் நவாஸ், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் ஆவார். 1992 ஆம் ஆண்டில் அவர் சப்தர் அவான் என்பவரை மணந்தார். பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றிய சப்தர் அவான், நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். மரியம் நவாஸ் - சப்தர் அவானுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்

2012ஆம் ஆண்டில் மரியம் நவாஸ் அரசியலில் நுழைந்தார். சமீபத்திய பாகிஸ்தான் பொதுத் தேர்தலின்போது, நாடாளுமன்றத்துக்கும்ம் பஞ்சாப் மாகாண சட்டமன்றத்துக்கும் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.