நியூசிலாந்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது.
உலகின் முதல் நாடாக அறியப்படும் மத்திய பசிபிக் பெருங்கடலின் தீவு தேசமான கிரிபாட்டி தீவு ஆங்கிலப் புத்தாண்டை முதலில் வரவேற்றுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இந்தத் தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்தும் புத்தாண்டை வெகு விமரிசையாக வரவேற்றுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தலைநகர் ஆக்லாந்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நியூசிலாந்திலேயே உயரமான கட்டடமான ஸ்கை டவரில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. அங்கு குவிந்திருந்த ஏராளமான மக்கள் புத்தாண்டு பிறந்தவுடன் மகிழ்ச்சை வெளிப்படுத்தி மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.