நேபாள இடைக்கால அரசின் பிரதமராக சுஷிலா கார்கி இன்று பதவியேற்றுள்ளார். இதன்மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2016-ல் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக அவர் பதவி வகித்தார்.
கே.பி. ஷர்மா ஒலியின் அரசைக் கவிழ்த்த ஜென் ஸீ போராட்டக்காரர்களால் கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். டிஸ்கார்டு (Discord) என்கிற இணையத்தளத்தில் ஜென் ஸீ போராட்டக்காரர்கள் நடத்திய வாக்கெடுப்பில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று கார்கி தேர்வானார்.
நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட, தேர்தல் நடத்த, நேபாளத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய முயலப்போவதாக கார்கி கூறியுள்ளார்.