உலகம்

கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு

கனடா ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது என்று உறுதியாகக் கூறினார்.

கிழக்கு நியூஸ்

லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி, கனடா நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். லிப்ரல் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்ததால் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததையடுத்து, புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வானார்.

கனடாவின் 24-வது பிரதமரான கார்னி - பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பதவியேற்றார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு கனடாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில் பொருளாதார நிபுணரும் முன்னாள் மத்திய வங்கி அதிகாரியுமான கார்னி ட்ரூடோ, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அடுத்ததாகப் பிரதமர் பதவியை ஏற்றுள்ளார்.

"இன்று, ஓர் அரசாங்கத்தை நாம் உருவாக்குகிறோம். கனடா மக்கள் நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்கள். இந்தக் குழு அதைத்தான் செய்யும். ஒரு சிறிய, வலுவான அமைச்சரவை துரிதமாகப் பணியாற்றி நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும், கனடாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் கார்னி. அவர் மேலும் கூறுகையில், கனடாவின் இறையாண்மைக்கு மரியாதை அளிப்பதாக இருந்தால் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க ஒப்புக்கொள்வேன். கனடா ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது என்று உறுதியாகக் கூறினார்.