சமூக ஊடக அடிமைத்தன வழக்கு: கூகுள், மெட்டாவுக்கு அபராதம் விதிப்பு  
உலகம்

சமூக ஊடக அடிமைத்தன வழக்கு: கூகுள், மெட்டாவுக்கு அபராதம் விதிப்பு | YouTube | Instagram |

இளம் பெண்ணின் மன நிலை பாதிக்க காரணமாக இருந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டு...

கிழக்கு நியூஸ்

அமெரிக்காவில் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது தொடர்பான வழக்கில் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாக சமூக ஊடக நிறுவனங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. பல மாநிலங்கள் சமூக ஊடக பயன்பாட்டுக்கு வயது சோதனை, பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டு கட்டுப்பாடு உள்ளிட்ட சட்டங்களை இயற்றியுள்ளன.

மனநிலை பாதிப்பு வழக்கு

இதற்கிடையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் மனநல பாதிப்பிற்கு கவர்ச்சிகரமான காணொளிகளைத் தொடர்ந்து வெளியிட்டு, அடிமைத்தனத்திற்கு உட்படுத்திய இன்ஸ்டாகிராம், யூடியூப் தளங்கள்தான் காரணம் என அவருடைய பெற்றோர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். அந்த இளம்பெண் சிறு வயதிலிருந்தே இந்தச் செயலிகளில் அதிக நேரம் செலவிட்டதால் சமூக ஊடக அடிமைத்தனத்திற்கு ஆளானதாகவும், அதனால் மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும் வழக்கில் கூறப்பட்டது.

மெட்டா, கூகுள் மீது குற்றச்சாட்டு

இதையடுத்து நேற்று (மார்ச் 25) தீர்ப்பளித்த நீதிபதிகள், இளம்பெண்ணின் மனநல பாதிப்புக்கு கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களின் தளங்களே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 3 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இந்திய மதிப்பில் ரூ. 28 கோடி. இதில் 70% அபராதத்தை மெட்டா நிறுவனமும் 30% அபராதத்தை கூகுள் நிறுவனமும் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து, மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனமும் உடனடி விளக்கம் அளிக்கவில்லை.

A Los Angeles court has ruled that Meta and Google should be held liable in a lawsuit related to social media addiction in the United States.