ஜோ பைடன்  ANI
உலகம்

இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது: ஜோ பைடன் சர்ச்சைக் கருத்து

யோகேஷ் குமார்

சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவுள்ளதாகவும், அதனால்தான் அந்த நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடும் ஜோ பைடன், வாஷிங்டனில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவ்விழாவில் ஜோ பைடன் பேசியதாவது:

“சீனாவின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது ஏன்? ஜப்பான், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகின்றன? ஏனென்றால், அவர்கள் இனவெறி கொண்டவர்கள். அந்நாடுகள் அந்நியர்களை வெறுக்கின்றன. இது அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை விரும்புவதில்லை. ஆனால், அமெரிக்காவைப் புலம்பெயர்ந்தவர்கள் தான் வலிமையாக்குகிறார்கள். சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள அந்நிய வெறுப்பு அவர்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது” என்றார்.