காஸா நகர மாவட்டமான ஸைட்டூனில் இஸ்ரேலிய படையினர் தொடர்ந்து இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
இஸ்ரேலிய விமானப் படையுடனான கூட்டு நடவடிக்கைகளில், அதன் தரைப்படைகள் ஒரு ஹமாஸ் ஆயுத உற்பத்தி நிலையத்தையும் ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் பிற இராணுவ அமைப்புகளையும், அத்துடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படைக் கூறிய கணிசமான அளவு உபகரணங்களைக் கொண்ட ஒரு ஆயுத உற்பத்தி இயந்திரத்தையும் கண்டுபிடித்தன. மேலும் ஸைட்டூனில், இஸ்ரேலிய படைகள் ஒரு சுரங்கத்திற்குள் பல பயங்கரவாதிகளை அழித்து, பின்னர் ஆழ் சுரங்கத்தையும் அழித்தன.
மத்திய காஸாவில், திங்களன்று ஹமாஸின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலிய விமானப்படை ஒரு செயல்பாட்டு மையத்தைத் தாக்கியது. அங்கிருந்து பல ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. அப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பயங்கரவாதிகள் பயன்படுத்திய கூடுதல் செயல்பாட்டு மையமும் தாக்கப்பட்டது.
கடந்த ஒருநாளில் மத்திய காஸாவில் தனித்தனியாகத் தரைப்படைகள், பல பயங்கரவாதிகளை அழித்ததுடன், பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் கண்டறிந்து டஜன் கணக்கான ஆயுதங்களைக் கைப்பற்றின. ஹமாஸின் டஜன் கணக்கான போர்த்தளவாடங்களைப் பொறியியல் துருப்புக்கள் அழித்ததாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை மேலும் கூறியது. போர் நடக்கும் பகுதியில் இருந்து தப்பி ஓட முயன்ற பல பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் பிடித்தனர்.
காஸா பகுதிக்கு அடுத்துள்ள இஸ்ரேலியச் சமூகங்களுக்கு அருகில் பாதுகாப்பான பகுதிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல்களை நடத்தினர். இந்த மோதலில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 7 அன்று காஸா எல்லைக்கு அருகே இஸ்ரேலியச் சமூகங்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 134 பணயக் கைதிகளில் 31 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.