டிட்வா புயல்: இலங்கையில் சிக்கிய இந்தியர்கள் 300 பேர் மீட்பு 
உலகம்

டிட்வா புயல்: இலங்கையில் சிக்கிய இந்தியர்கள் 300 பேர் மீட்பு | Sri Lanka |

வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையில் 320-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு, 400-க்கும் மேற்பட்டோர் மாயம்...

கிழக்கு நியூஸ்

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக 330 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்திய விமானப் படை மீட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாகத் தீவிரமடைந்து புயலாக வலுப்பெற்றது. இது நவம்பர் இறுதியில் இலங்கையை நோக்கி நகர்ந்ததால், அங்கு பல பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. தொடக்கத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணங்களான மட்டக்களப்பு, திருகோணமலை ஆகியவற்றைத் தாக்கிய டிட்வா புயல், பின்னர் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்தது. இதனால் இலங்கை முழுவதும் அதிகனமழை பெய்தது.

இந்த பெருமழை காரணமாக, நாட்டின் பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக கெலனி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்டதால் கொழும்​பு​வின் வடக்கு பகுதி முழு​வதும் வெள்​ளத்​தால் சூழப்​பட்​டுள்​ளது. தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இன்னொருபுறம் நிலச்சரிவுகளாலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இதில், இன்றைய நிலவரப்படி டிட்வா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தாழ்வான பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் சிக்கிய இந்தியர்களை மீட்க சிறப்பு மீட்புக் குழுவையும், இலங்கை மக்களுக்கான அடிப்படை மனிதநேய உதவிகளையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

ஆபரேஷன் ‘சாகர் பந்​து’ என்ற பெயரில் நிவாரணப் பணி​களை மேற்​கொள்​வதற்​காக சேட்​டக் ஹெலி​காப்​டர்​கள் ஐஎன்​எஸ் விக்​ராந்த் கப்பலில் இருந்து அனுப்பி வைக்​கப்​பட்​டன. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை இந்திய விமானப் படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்தியர்கள் திருவனந்தபுரம் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இலங்கையில் மீட்புப் பணிகளிலும் இந்தியா உதவி வருகிறது.

The Indian Air Force (IAF) has evacuated more than 300 Indian nationals who were stranded in Sri Lanka amid severe flooding triggered by Cyclone Ditwah that has killed over 330 people and affected more than 1.3 million across the island.