Brian Snyder
உலகம்

இந்தியாவில் தயாரிப்பதை விரும்பவில்லை: ஆப்பிள் சிஇஓவிடம் டிரம்ப் வலியுறுத்தல்!

இந்தியாவின் இருந்து மேற்கொள்ளப்படும் எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகள் மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தியது.

ராம் அப்பண்ணசாமி

ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியை விரிவுபடுத்தவேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கேட்டுக்கொண்டதாக, ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

`இந்தியாவில் (ஆப்பிள் பொருள்களை) தயாரிக்கும் பணியை நீங்கள் மேற்கொள்வதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. அவர்களே தங்களை கவனித்துக்கொள்வார்கள்; அவர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்’ என்று கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஒரு வணிக நிகழ்வில் வைத்து ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிக் குக்கிடம், டிரம்ப் கூறியதாக ப்ளூம்பெர்க் செய்தியில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

இந்த உரையாடலைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி அமெரிக்காவில் அதிகரிக்கும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் இந்தியாவை முன்வைத்து ஆப்பிளால் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் எதையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்தியாவின் இருந்து மேற்கொள்ளப்படும் எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகள் மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் மீது வரிகளை உயர்த்தப்போவதாக அண்மையில் இந்தியா எச்சரித்தது. இது நடந்த சில நாட்களில், டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

வரிகளை முன்வைத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் நீடிக்கும் நிலையிலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக ப்ளூம்பெர்க்குக்கு தகவல் கிடைத்துள்ளது. வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளை இரு தரப்பும் மேற்கொண்டு வருகிறது.

மேலும், ​​அமெரிக்கப் பொருட்கள் மீதான (இறக்குமதி) வரிகளை நீக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் தோஹாவில் டிரம்ப் கூறினார். ஆனால், எந்த ஒரு விவரங்களையும் குறிப்பிடாமல், `அவர்கள் (இந்தியா) எங்களிடம் எந்த வரியையும் வசூலிக்கத் தயாராக இல்லை’ என்று வெறுமனே குறிப்பிட்டார்.