அமெரிக்க அதிபர் டிரம்ப் (கோப்புப்படம்) 
உலகம்

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறேன்: டிரம்ப் | Donald Trump |

"பிரதமர் மோடியை அழைத்து உங்களுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது என்றேன்."

கிழக்கு நியூஸ்

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கொரியாவில் பேசியுள்ளார்.

தென் கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் தொழில் துறை தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து மீண்டும் பேசினார்.

டிரம்ப் கூறியதாவது:

"இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உள்ளது. எங்கள் இருவருக்கிடையே நல்ல உறவு இருக்கிறது. அதேபோல, பாகிஸ்தான் பிரதமரும் சிறந்த மனிதர். அவர்களிடம் ஃபீல்ட் மார்ஷல் இருக்கிறார். அவர் ஏன் ஃபீல்ட் மார்ஷல் தெரியுமா? அவர் ஒரு மகத்தான போர் வீரர். அவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும்.

ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வாசித்தேன். இவ்விரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள். கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். பிரதமர் மோடியை அழைத்து உங்களுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது என்றேன். இல்லை, இல்லை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். பதிலுக்கு நான், இல்லை முடியாது என்றேன். நீங்கள் பாகிஸ்தானுடன் போர் புரிகிறீர்கள், எனவே வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று சொன்னேன்.

அடுத்ததாக பாகிஸ்தானை அழைத்தேன். நீங்கள் இந்தியாவுடன் சண்டையிடுவதால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்றேன். அவர்கள், இல்லை, இல்லை நாங்கள் சண்டையிடுவதை நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்கள். இரு தரப்பும் இதைச் சொன்னார்கள். அவர்கள் வலிமையானவர்கள்.

பிரதமர் மோடி மிகவும் நல்ல தோற்றமுடையவர். அவரைத் தந்தையாகக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். ஆனால், அவர் மிக மிகக் கடினமான மனிதர். இல்லை, நாங்கள் சண்டையிடுவோம் என்றார் அவர்.

இரு நாள்களுக்குப் பிறகு, எங்களுக்குப் புரிகிறது, நாங்கள் சண்டையை நிறுத்துகிறோம் என்று அழைத்துச் சொன்னார்கள். இது எப்படி இருக்கிறது? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? பைடன் இதைச் சாத்தியப்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? அவரால் இதைச் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது" என்றார் டிரம்ப்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதில் 25 சதவீதம் என்பது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் கையெழுத்தாகாமலே இருந்தது.

US President Donald Trump on Wednesday lavished praise on Prime Minister Narendra Modi as the "nicest-looking guy" while describing him as a "father" but also calling him "a killer" and "tough as hell", while hinting at an imminent trade deal between the two countries.

Donald Trump | US President | PM Modi | India Pakistan |