துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் டிரோன் வெடிப்பு: இந்தியர் உட்பட 4 பேர் காயம் ANI
உலகம்

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் டிரோன் வெடிப்பு: இந்தியர் உட்பட 4 பேர் காயம் | Dubai | Iran | UAE |

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன்களை ஐக்கிய அரபு அமீரக வான் படையினர் எதிர்கொண்டு வருகின்றனர்...

கிழக்கு நியூஸ்

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரானின் இரண்டு டிரோன்கள் விழுந்ததில் இந்தியர் ஒருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தாக்குதல் 12 நாள்களை எட்டியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு, இஸ்ரேலையும் வளைகுடா நாடுகளையும் ஈரான் தாக்கி வருகிறது.

டிரோன்கள் வெடித்து 4 பேர் காயம்

இந்நிலையில் இன்று மதியம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான சத்தத்துடன் இரண்டு தற்கொலைப்படை டிரோன்கள் விழுந்து வெடித்தன. இந்தத் தாக்குதலால் விமான நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தற்செயலான வெடிப்பில் சிக்கி நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் கானா மற்றும் ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமான போக்குவரத்து பாதிப்பு இல்லை

இதற்கிடையில் டிரோன்கள் விழுந்த நிலையிலும் விமானப் போக்குவரத்து இயல்பாகவே தொடர்வதாக துபாய் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் செய்தியாளர்களுக்குக் கூறியுள்ளனர். மேலும், இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தடுத்து நிறுத்தி வருவதாகக் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் பதிலடி

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் டிரோன் ஊடுருவல்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படையினர் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேட்ட சத்தங்கள் யாவும், வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாலும், போர் விமானங்கள் மூலம் டிரோன்கள் மற்றும் வெடிபொருள் ஏந்திய ஊடுருவல் கருவிகளை இடைமறித்ததாலும் ஏற்பட்டவை. ஈரானிலிருந்து வரும் ஏவுகணை மற்றும் டிரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு அமீரக வான் பாதுகாப்புப் படையினர் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Dubai International Airport struck with two drones, no casualties