ஹார்முஸ் நீரிணையைக் கண்காணிக்க உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை: டிரம்ப் தகவல் 
உலகம்

ஹார்முஸ் நீரிணையைக் கண்காணிக்க உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை: டிரம்ப் தகவல் | Trump | Iran |

எண்ணெய் விலைகள் போர் முடிந்தவுடன் பெரிய அளவில் குறையும், அது மிக விரைவில் முடியும்...

கிழக்கு நியூஸ்

ஹார்முஸ் நீரிணையைக் கட்டுக்குள் வைப்பதற்காக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர், மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயத்துல்லா காமெனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் எரிசக்திக்காக மத்திய கிழக்கை நம்பியுள்ள நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையைக் கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

எண்ணெய் விலைகள் போர் முடிந்தவுடன் பெரிய அளவில் குறையும், அது மிக விரைவில் முடியும். ஈரானிலிருந்து நமக்கு மிகச் சிறந்த ராணுவ செய்திகள் கிடைத்துள்ளன. ஹார்முஸ் நீரிணையைக் கண்காணிப்பது தொடர்பாக சில நாடுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா அவ்வழியாக 1 முதல் 2% மட்டுமே எண்ணெய் பெறுகிறது. ஆனால் சீனா 90% எண்ணெய் பெறுகிறது. எனவே அத்தகைய நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து ஹார்முஸ் நீரிணையைக் கண்காணிக்க முன் வருவது நல்லது.

அமெரிக்கா நினைத்தால் அழித்துவிடலாம்

ராணுவ ரீதியாக, என் கருத்துப்படி, அமெரிக்கா ஈரானை அடிப்படையில் தோற்கடித்துவிட்டது. அவர்களிடம் கொஞ்சம் எதிர்த்துப் போராடும் சக்தி மிச்சமிருக்கலாம். ஆனால் அதிகமாக இல்லை. அவர்களின் விமானப்படை, கடற்படை மற்றும் வான்வெளி பாதுகாப்பு அழிக்கப்பட்டுவிட்டது. ஈரானின் கார்க் தீவு சமீபத்தில் தாக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் எண்ணெய் குழாய்கள் வரும் ஒரு சிறிய பகுதி மட்டும் விட்டுவைக்கப்பட்டது. அமெரிக்கா நினைத்தால் அதையும் தாக்கி ஐந்தே நிமிடத்தில் அழித்துவிடலாம். ஏவுகணைகள் ஏற்றப்பட்டு, தயாராக உள்ளன.

ஈரான் வதந்தி பரப்புகிறது

ஈரான் பொய்யான தகவல்களைப் பரப்புகிறது. அவர்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டு பொய்ச் செய்திகளைப் வெளியிடுகிறார்கள். ஆபிரகாம் லின்கன் போர்க்கப்பல் தாக்கப்பட்டதாகக் காட்டுகிறார்கள். ஆனால் அதன் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அவை முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை. ஈரான் சுமார் 2,50,000 மக்கள் ஒரு சதுக்கத்தில் கமெனி-யை ஆதரித்ததாகக் காட்டியது. அவை முற்றிலும் செயற்கையானவை” என்றார்.

Without naming the nations that he has approached, Trump indicated that he was calling out the countries that were heavily dependent on Middle Eastern oil supplies and that they should take greater responsibility for policing the Strait of Hormuz.