வங்கதேசத்தில் அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை இறுதியில் வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக எழுந்த போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தார்கள். இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனால் அந்நாட்டில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உருவானது.
இதற்கிடையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, ஷேக் ஹசீனா மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. சமீபத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக கூறி தொடர்ந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை
இந்நிலையில் வங்கதேசத்தில் புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் விதிமுறைகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அப்துல்லா அல் மமும், 3 வழக்குகளிலும் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்தார். மேலும், அவருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அவரது மகன் சஜீப் வாகீத்துக்கும், மகள் சயிமா வாஜீத்துக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷேக் ஹசீனாவுக்கு ஒவ்வொரு வழக்கிற்கும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம், அதைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டது.
A Bangladesh court has sentenced former Prime Minister Sheikh Hasina to 21 years in prison in a case of alleged corruption in the allocation of land for government projects.