உலகம்

பிறந்தது 2025 புத்தாண்டு!

2025 ஜன.1 முதல் பிறக்கும் குழந்தைகளின் தலைமுறை `ஜெனரேஷன் பீட்டா’ (ஜென். பீட்டா) என்று அழைக்கப்படும்.

ராம் அப்பண்ணசாமி

உலகில் முதலாவதாக பசிஃபிக் பெருங்கடல் தீவு நாடான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.

வடக்கு பசிஃபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளுக்குத் தெற்கே அமைந்துள்ள தீவு நாடான கிரிபாட்டியில் (இந்திய நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு), உலகிலேயே முதலாவதாக ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், அந்நாட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

கிரிபாட்டியைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டிலும், அடுத்தாக ஆஸ்திரேலியா, இந்தொனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்தடுத்து ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. அந்தந்த நாட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் புத்தாண்டை வரவேற்றனர்.

மேலும், ஜன.1 முதல் அதாவது 2025-ம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளின் தலைமுறைக்குப் புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2010 தொடங்கி 2024 வரை பிறந்த தலைமுறையினர் `ஜெனரேஷன் ஆல்ஃபா’ (ஜென். ஆல்ஃபா) என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 2025 ஜன.1 முதல் பிறக்கும் குழந்தைகளின் தலைமுறை `ஜெனரேஷன் பீட்டா’ (ஜென். பீட்டா) என்று அழைக்கப்படும். 2039-ம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் இந்தத் தலைமுறைக்குள் அடங்கும்.