பயனர்களின் சௌகரியத்துக்காக யூடியூபில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில் பிளேபேக் ஸ்பீடில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் ஸ்லீப் டைம் அம்சம் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக வந்துள்ளன. பிளேபேக் ஸ்பீட், அதாவது வீடியோ வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் பார்க்கக்கூடிய அம்சம் 0.25-ல் இருந்து தொடங்கும். தற்போது 0.05 வேகத்தில் வீடியோவை பார்க்கும் வகையில் புதிதாக அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் பயனர்கள் 2x வேகம் வரை தற்போதும் வீடியோவை காணலாம்.
ஸ்லீப் டைமர் அம்சமானது இதுவரை பிரிமீயம் சப்ஸ்க்ரைபர்ஸுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது அனைத்துப் பயனர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ முடிந்தவுடன் டைமர் முடியும் வகையிலும் புதிய அம்சத்தைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், யூடியூபில் மற்ற பயனர்களுடன் இணைந்து ஒரு பிளேலிஸ்டை உருவாக்கலாம். இதில் பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட படங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மூலம் தங்களுக்கு விருப்பமான தம்ப்னைல் படத்தை வைத்துக்கொள்ளலாம்.
லேண்ட்ஸேக்ப் முறையில் இருக்கும்போதும் யூடியூபில் பயனர்கள் தேடுவதற்கு ஏதுவாக புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. ஆப்பிள் சாதனங்களில் இது கொண்டுவரப்படவுள்ளன. செயலிக்குள் மினி பிளேயர் அம்சம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு மூலம் மினி பிளேயரின் அளவை மாற்றியமைக்க முடியும். இடமாற்றம் செய்துகொள்ளவும் முடியும். பயனர்களின் பயன்பாட்டை எளிதாக்க இது கொண்டுவரப்படவுள்ளது.
இதுதவிர தொலைக்காட்சிகளில் யூடியூப் பார்க்கும் அனுபவத்தைக் கூட்ட, யூடியூப் பேட்ஜ் என 20-க்கும் மேற்பட்ட புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்யவுள்ளது.