எக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘எக்ஸ்சாட்’ 
தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப் செயலிக்குப் போட்டியாக ‘எக்ஸ்சாட்’ அறிமுகம் | Elon Musk |

தொலைப்பேசி எண்கள் இல்லாமலேயே ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் விடுக்கலாம்...

கிழக்கு நியூஸ்

எக்ஸ் தளத்தின் புதிய தகவல் தொடர்பு செயலியான எக்ஸ்சாட் முதற்கட்டமாக ஐபோன் மற்றும் எக்ஸ் வலைத்தள பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்ஆப், தற்போது தகவல் தொடர்பில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. இதற்குப் போட்டியாக பல்வேறு தகவல் தொடர்பு செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரட்டை செயலி, டெலிகிராம், விசாட் போன்ற பல்வேறு செயலிகள் இணையத்தில் உள்ளன. இதற்கிடையே, வாட்ஸ்ஆப் வழங்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தகவல் தொடர்பு செயலியை எக்ஸ் நிறுவனம் உருவாக்கும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எலான் மஸ்க் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

அந்தச் செயலியில் மற்ற தகவல் தொடர்பு செயலிகள் போலன்றி, எக்ஸ்சாட் முழுவதும் பிட்காயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வேகம் மற்றும் தகவல்களின் பாதுகாப்பு மேம்பட்ட வகையில் கிடைக்கும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இணையதளத்தில் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவோருக்கும் ஐபோன் பயனர்களுக்கும் எக்ஸ்சாட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது ஆண்டிராய்டு பயனர்களுக்கும் விரிவாக்கப்படும் என்று எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் போலவே இதிலும் தகவல்கள் மறைகுறியாக்கம் செய்யப்பட்டு பகிரப்படும். அதுமட்டுமன்றி குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தகவல்கள் மறைந்துபோகும் வசதி, எந்த வகைக் கோப்புகளையும் பகிரும் வசதி ஆகியவையும் வாட்ஸ் ஆப்பில் உள்ள அம்சங்களைப் போலவே எக்ஸ் சாட்டிலும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய அம்சமாக தொலைப்பேசி எண் இல்லாமலேயே ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் செய்துகொள்ளும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிட்காயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது பெரும்பாலான எக்ஸ் பயனர்களுக்கு இந்த வசதி செயல்பட்டு வருகிறது. சில நாடுகளில் மட்டும் ப்ரீமியம் செலுத்திய பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அழைப்பு, தகவல் தொடர்பு மட்டுமன்றி பன்முகம் கொண்ட செயலியாக இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ள எலான் மஸ்க், இதில் பணம் அனுப்பும் வசதிகளையும் உள்ளிணைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tesla CEO Elon Musk’s social media platform X (formerly known as Twitter) has finally rolling out XChat its new privacy-focused messaging service rivalling WhatsApp.