மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு @SuVe4Madurai
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

2019 மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

யோகேஷ் குமார்

மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் (மாவட்ட செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவை தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் நடராஜனும், மதுரை தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலிலும் கடந்த முறையை போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை மதுரையுடன், கோவைக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதி அக்கட்சிக்கு வழங்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் (மாவட்ட செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.