தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்! 
தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

பிளிரும் யானைகளுடன் இரு வண்ணங்களில் த.வெ.க. கொடி.

யோகேஷ் குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும் பாடலையும் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அறிமுகம் செய்துள்ளார் .

கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜய்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு களமிறங்கிய விஜய் நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்தார்.

இவற்றைத் தொடர்ந்து தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அவர், கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

சில நாள்களுக்கு முன்பு கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்ததாகவும் சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலை வெளியிட்டு, கட்சியின் கொடியை ஏற்றி வைப்பதாக நேற்று (ஆகஸ்ட் 21) அறிக்கை வெளியிட்டார் விஜய்.

இந்நிலையில் சென்னை பனையூரிலுள்ள தலைமை நிலையச் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜய் உறுதிமொழியைக் கூற அதனை கட்சி நிர்வாகிகள் திருப்பிக் கூறினார்கள்.