சவுக்கு சங்கர் 
தமிழ்நாடு

சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை: சிறைத்துறை விளக்கம்

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

யோகேஷ் குமார்

சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை என சிறைத்துறைத் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் மே 4 அன்று கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சிறைக்குச் செல்வதற்கு முன்பு ஏற்பட்ட விபத்தினால் சவுக்கு சங்கர் உதட்டில் மட்டும் சிறிது காயம் ஏற்பட்டதாகவும் மற்ற எந்த விதமான காயங்கள் ஏற்படவில்லை என்றும் சிறையில் அடைத்த பிறகு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என்றும் அவரின் கைகள் உடைக்கப்பட்டதாக வெளியான தகவலும் உண்மை அல்ல என்றும் சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.